யார் அசீமுக்கு ஓட்டுப் போட்டது? பிக் பாஸ் தேர்வும், புலம்பும் மக்களும் !
விஜய் டிவி மீது தங்கள் எதிர்ப்பை சொல்லி வருகிறார்கள் மக்கள். அசீம் வெற்றி பெற்றதன் அதிர்வலைகள் நம் வீடுகளிலும் பிரதிபளிப்பதை காண முடிகிறது.
அசீமுக்கு போய் எப்படி ? பெண்களை எவ்வளவு மோசமா பேசுனான்… எல்லாரையும் எவ்வளவு மட்டம் தட்டி பேசுனான்… அவனுக்கு போய் எப்படி பிக் பாஸ் டைட்டில் வின்னர் கொடுத்தாங்க…இது மோசடி…ஏமாற்றும் வேலை என செம கடுப்பில் இருப்பதை பார்க்க முடிகிறது.
யார் அசீமுக்கு ஓட்டு போட்டது ? எதுக்காக ? ஏன் விக்ரமன் தோல்வி அடைந்தார் ? என மக்கள் கேட்கும் அந்த இரு கேள்விகள் தான் மிக சுவாரஸ்யமானவை. அந்த தேடலில் மக்கள் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். அரசியல் தேர்தல்களில் மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்பதற்கான ஒரு புரிதலை ஏற்படுத்தவும் இது உதவி செய்கிறது.
அசீம் தவறு செய்திருக்கார்… சரியில்லை என தெரிந்தும் அவர் சார்ந்த சமுதாயம் பக்க பலமாக வெற்றி பெற வைத்திருக்கிறார்கள் என ஒரு பக்கம். இன்னொரு பக்கம் வெற்றி பெற்றிருக்கவேண்டிய விக்ரமன், கடைசி நேரத்தில் விசிக தலைவர் திருமா ஆதரவு கேட்டதன் விளைவாக பல்வேறு சமுதாய மக்கள் விக்ரமனை புறக்கணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர் என மறு பக்கம். இந்த இழுபறியில் ஷிவின் வெற்றி வாய்ப்பு காணாமல் போனது.
இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா பாஸ்.. இதுக்கு ஒரு பதிவு தேவையா என்றெல்லாம் சொன்னாலும், பெரும்பாலான தமிழக மக்கள் ரசிக்கும், கவனிக்கும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ். எது பிடிக்கும் எது பிடிக்காது,உணர்ச்சிகள் எப்படி முடிவுகளை மாற்றும், சாதி மதங்கள் எப்படி முடிவுகளை தீர்மானிக்கின்றன என பல முக்கிய படிப்பினைகளை உள்ளடக்கியிருக்கிறது பிக் பாஸ்..!
ஓவியா ஆர்மி, ஐஸ்வர்யா ஆர்மி யோடு சரி, கடந்த சில வருடங்களாக ஒரு எபிசோட் கூட பிக் பாஸ் பார்க்காத மைனாரிட்டி குரூப்பில் இருந்தாலும், பிக் பாஸ் பற்றிய பேச்சுக்களை புறம் தள்ள முடியல.