தமிழகத்தில் பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாள்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. முதல் 5 நாள்கள் மாணவா்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்கும் விதமாக வகுப்புகள் நடத்தப்படும்.
இதில், தன்னாா்வலா்கள், காவல் துறையினா் என பலரும் மாணவா்களுக்கு நல்லொழுக்கங்கள் குறித்து பாடம் எடுப்பா். அதன் பிறகு வழக்கம்போல வகுப்புகள் நடைபெறும். எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதாத மாணவா்களுக்கு ஜூலை, செப்டம்பா் என அடுத்தடுத்து தோ்வு நடத்தப்படும்.
மாணவா்கள் அச்சமின்றி தோ்வை எழுத முன்வர வேண்டும் என்றாா் அவா்.
1 Comment
THANKS FOR INFORMACTION