தஞ்சை திருச்சி சாலையில் பிள்ளையார் பட்டி ஊராட்சியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்களின் வசதிக்காக வாசலில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது ஆனால் வெயிலில் மக்கள் சிரமப்பட்டதால் கலெக்டர் அலுவலக வாசல் அருகில் சிறிய அளவிலான பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் ஏறத்தாழ 100 அடி தொலைவில் தஞ்சை சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூபாய் 15 லட்சம் செலவில் கடந்த 2014 ஆம் ஆண்டு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது பரந்த அளவில் உள்ள இந்த நிலையில் வழுவழுப்பான கற்கள் பதிக்கப்பட்டு மக்களை கவரும் விதமாக களகளப்பாக கட்டப்பட்டுள்ளது.
ஆனால் கட்டி முடித்து ஏறத்தாள ஆறு ஆண்டுகளாகியும் பயனில்லாத நிலையில் தான் இந்த பயணிகள் நிழற்குடை உள்ளது பயணிகள் வழக்கம் போல கலெக்டர் அலுவலக வாசலில் உள்ள சிறிய அளவிலான பயணியர் நிழல் குடையில் தான் நிற்கின்றனர் ஆனால் இதில் இடவசதி குறைவாக இருப்பதால் அதிகபட்சமாக 10 பேர் கூட நிற்க முடியாது வெயிலுக்கும் மழைக்கும் முற்றிலும் நிழல் தராத பஸ்நிறுத்தம் இது எனவே வெயில் மழை காலங்களில் எந்த பஸ் நிறுத்தம் பயனில்லாத நிலையிலேயே இருக்கிறது மேலும் பஸ்களும் வழக்கம் போல கலெக்டர் அலுவலக வாசலிலேயே நிற்பதால் பயணிகளும் இந்த சிறிய அளவிலான பயணிகள் நிழற்குடையில் நிற்கின்றனர் அருகில் இருக்கும் ரூபாய் 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடைகள் செல்வதில்லை அங்கு பஸ்களை நிறுத்துவதற்கும் பயணிகள் அங்கே அனுப்புவதற்கும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் எந்தவித முயற்சியும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.