கொரோனா வைரஸ் மற்றும் அதன் திரிபு வைரஸ்களுக்கு எதிராக நோய்யெதிர்ப்பாற்றல் எந்த வகையில் செயல்படுகிறது என்ற ஆய்வில், கோவாக்சினை விடவும் கோவீஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த ஒருக் கூற்றையே உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது கொரோனா பாதிக்காமல், கோவிஷீல்டு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்களைக் காட்டிலும் மிக அதிகமான நோய்எதிர்ப்பாற்றலும், அதிக காலம் எதிர்ப்பாற்றல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, காலப்போக்கில் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துவந்த போதிலும், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்தத்தில், மிக நீண்ட காலத்துக்கு ஆன்டிபாடிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாம்