தஞ்சாவூர் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 27 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 18 பேர் தி.மு.க.வை சே்ாந்தவர்கள் ஆவர். அ.தி.மு.க.வினர் 7 பேரும், பா.ம.க., பாரதீய ஜனதாவை சோ்ந்த தலா ஒருவரும் உறுப்பினராக உள்ளனர்.
தி.மு.க.வை சேர்ந்த காயத்ரி அசோக்குமார் தலைவராகவும், உள்ளூர் டி.கணேசன் துணைத் தலைவராகவும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில், 26 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கூட்ட அறையில் அனைவருக்கும் புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. கூட்டம் ரத்து இந்தநிலையில் கூட்ட அறைக்கு வந்த துணைத்தலைவர் கணேசன் அவருக்குரிய இருக்கையில் அமராமல் தலைவர் இருக்கையின் அருகில் ஆணையருக்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்திருந்தார்.
அப்போது கூட்ட அறைக்கு வந்த தலைவர் காயத்ரி அசோக்குமார் ஒன்றிய குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து விட்டு வெளியே சென்றார். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் சசிகலா அறிவொளி தலைமையில் ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் வந்த அ.தி.மு.க.வினர் கூட்டத்தை முறைப்படி நடத்த வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜனிடம் முறையிட்டனர்.