மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். சோழர்களின் வரலாற்றை சில கற்பனை கதாபாத்திரங்களுடன் இணைத்து அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்று பலரும் முயற்சித்தனர்.
5 பாகங்களாக வெளிவந்த அந்த நாவலை படமாக்குவது என்பது சாதாரண காரியம் அல்ல. எம்ஜிஆர் கூட இந்த முயற்சியில் இறங்கி, பின்னர் அது தோல்வியில் முடிந்து, படத்தை பாதியிலேயே கைவிட்டார். தற்போது இந்த படத்தை மணிரத்தினம் எடுத்து சாதித்து காட்டியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது
இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஜூலை 8 அன்று படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இன்று வரை 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
படத்தில் விக்ரம், கார்த்திக், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார் பிரகாஷ்ராஜ், பார்த்திபன் போன்ற பலர் நடித்துள்ளனர்.
போர் காட்சிகள், குந்தவை மற்றும் நந்தினி சந்திப்பு, ஆதித்த கரிகாலனான விக்ரமின் காட்சிகள் என்று டீசரிலேயே மிக பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார் மணிரத்தினம். இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.!
ஏ.ஆர்.ரகுமான் குரலில் பொன்னி நதி என்ற படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாகும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விழா சென்னை எக்ஸ்பிரஸ் அவின்யூவில் லைவ் நிகழ்ச்சியில் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கள் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரகுமான் குரலில் அவர் பாடியுள்ள பொன்னி நதி என்ற பாடல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண
1 Comment
THANKS FOR INFORMACTION