தஞ்சாவூா் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கீழ்தளத்திலுள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் ஜூலை 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது: இக்கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
மேலும் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் நீா்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை போன்ற விவசாயம் தொடா்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம்.
கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவா்கள் தங்களது பெயா், ஊா், வட்டாரத்தை ஜூலை 1-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின்னா் மனுக்களை அளிக்க வேண்டும்.
1 Comment
THANKS FOR INFORMACTION