தஞ்சாவூர் மேட்டூர் அணையில் இருந்து அதிகபட்சமாக தண்ணீரை திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் கல்லணையை வந்து சேருவதற்கு முன்னதாக திருவளர்ச்சோலை அருகே உள்ள தரைப்பாலத்தில் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வழிந்து ஓடி கொள்ளிடத்தில் கலக்கிறது. திருவளர்ச்சோலை தொடங்கி கிளிக்கூடு கிராமம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் வழிந்தோடி வருவதால் நேற்று 2-வது நாளாக திருவானைக்காவல், திருவளர்ச்சோலை வழியாக கல்லணைக்கு பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு ஆகிய ஊர்களில் இருந்து கார்களில் இந்த வழியாக செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு கிளிக்கூடு கிராமத்தின் அருகே திருச்சி போலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் திருச்சி செல்ல வேண்டிய வாகனங்கள் வேங்கூர், சர்க்கார் பாளையம் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும் சுற்றுப் பாதையில் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று கல்லணை, கொள்ளிடத்தில் 35 மதகுகளும் முழுமையாக திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது.
1 Comment
THANKS FOR INFORMACTION