நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது இந்த பீரங்கி மேடு. இது தஞ்சாவூர் கொடிமரத்து மூளை மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த பீரங்கியானது நாயக்க மன்னர் காலத்திலே உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 1,600 ஆம் ஆண்டுகளில் ஆண்ட ரகுநாத நாயக்க மன்னர் 1645 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்த பீரங்கியை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
பீரங்கி செய்யும் தொழில்நுட்பம்:
இந்த பீரங்கி செய்யும் தொழில்நுட்பமானது அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. பொதுவாக பீரங்கிகள் வார்ப்பிரும்பு பட்டைகளால் உருவாக்கப்படும். ஆனால் இந்த பீரங்கியோ தேனிரும்பால் உருவாக்கப்பட்டுள்ளது.
தேன் இரும்பு என்பது பல்வேறு பகுதிகளை சிறிது சிறிதாக செய்து பின்பு ஒன்றோடொன்று ஒட்ட வைத்து மிக முக்கியமான இரும்பு பொருட்களை இணைக்கக்கூடிய உருக்கு உலை இணைப்பு தொழில்நுட்பம் மூலமாக செய்யப்பட்ட பீரங்கியாகும். அதனால் சுத்தமான எஃகினால் ஆன பீரங்கியாக காணப்படுகிறது.
தனித்து காணப்படும் பீரங்கி:
உலக வரலாற்றிலேயே 1800 க்கும் முன்பு செய்யப்பட்ட தேனிரும்பு பீரங்கிகளில் தஞ்சாவூரில் உள்ள இந்த பீரங்கியானது மிகவும் தனித்துக் காணப்படுகிறது.
இந்த பீரங்கி எங்கு செய்யப்பட்டது?
தஞ்சாவூர் பெரிய கோட்டையின் உட்புறம் கிழக்கு வாசலையொட்டி ஒரு பெரிய மேடை அமைக்கப்பெற்று அதன்மேல் இந்த பெரிய பீரங்கியானது வைக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் ‘இராஜகோபால பீரங்கி‘ என்று குறிப்பிடுகின்றனர். இது நாயக்கர் காலப் பீரங்கி என்பது செவி வழியாகத் தொடரும் செய்தியாகும்.
400 ஆண்டுகளாக வெட்டவெளியில் இருக்கும் பீரங்கி:
வார்பிரும்பில் செய்யப்பட்ட பீரங்கி கீழே விழும்போது உடைந்துவிடும், மேலும் தண்ணீர் காற்று படும் போது வார்ப்பிரும்பில் செய்யப்பட்ட பீரங்கியானது துருப்பிடித்து வீணாகிவிடும்.
ஆனால், தேன் இரும்பால் செய்யப்பட்ட இந்த பீரங்கியையானது 400 ஆண்டுகள், பீரங்கி கோட்டையின் மேல் பகுதியில் வெட்ட வெளியிலே இருக்கின்றது. 400 ஆண்டுகளாக இந்த பீரங்கியின் துருப்பிடிப்பானது 0% ஆக காணப்படுகிறது. இந்த பீரங்கியை ஒரு நூற்றாண்டுகளுக்கு தண்ணீரில் போட்டால் 0.2 சதவீதம் மட்டுமே துருப்பிடிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளில் இருக்கும் பீரங்கியானது வண்ணம் பூசப்பட்டு பாதுகாப்பான முறையில் பூட்டப்பட்டிருக்கும். ஆனால் தமிழ்நாட்டில், தஞ்சாவூரில் இருக்கும் இந்த பீரங்கியானது, 400 ஆண்டுகளாக வெட்டவெளியில் இருந்தும் எந்த ஒரு பாதிப்பையும் இதுவரையும் ஏற்படுத்தவில்லை. எனவே இந்த பீரங்கியை உருவாக்க பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பமானது மிக முக்கிய புதிய தொழில்நுட்பமாக உள்ளது .
ராஜகோபால பீரங்கியை கணிக்கமுடியாத கான்பூர் ஐஐடியைச் சேர்ந்தவர்கள் !
2004ஆம் ஆண்டு கான்பூர் ஐஐடி-யை சேர்ந்தவர்கள் தஞ்சாவூரில் இருக்கும் இந்த ராஜகோபால பீரங்கியை ஆய்வு மேற்கொள்ளும் போது இந்த பீரங்கியை கணிக்கப்பதற்கு மிகவும் கடினமான இருந்துள்ளது. அதற்கு முன்னதாகவே ரோஸ்லர் எனும் ஆய்வாளர் (அல்ட்ராசோனிக்) எனப்படும் மீயொலி அலைகளை வைத்து இந்த பீரங்கியின் வடிவமைப்பை மிக தெளிவாக குறிப்பிட்டிருந்தார். பிறகு இந்த குறிப்பினை எடுத்துக் கொண்டு ஐஐடி சேர்ந்தவர்கள் இந்த பீரங்கியின் அடிப்படை அமைப்புகளை தெரிந்துள்ளார்கள்.
‘இராஜகோபால’ பீரங்கி செய்யப்பட்ட முறை:
தூரத்திலிருந்து இந்த பீரங்கி பார்க்கும்போது 5 பகுதிகளை ஒன்றாக சேர்த்தது போல் தெரியும். ஆனால் அவ்வளவு எளிமையான வேலையாக இது நடக்கவில்லை. முதலில் ஒரு இரும்பு வளையத்தை உருவாக்கியும், அதன் பிறகு அதை விட பெரிய ஒரு இரும்பு வளையத்தை உருவாக்கியயும், மூன்றாக இந்த இரண்டு இரும்பு வளையத்தை விட மிக பெரியதாக ஒரு இரும்பு வளையத்தை உருவாக்கிய பிறகு ஒன்றோடு ஒன்று பற்ற வைத்து, மூன்று, மூன்று வளையங்களாக வைத்து, மொத்தமாக அதை ஒவ்வொன்றாக பற்ற வைத்து இதை போல் மொத்தம் 291 வளையங்களை ஒன்றோடொன்று பற்ற வைத்த தன் அடிப்படையில்தான் பீரங்கியின் அடிப்படையை அமைப்பானது அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் முகப்பு வாயிலில் மொத்தம் ஐந்து வளையங்கள் ஒன்றோடு ஒன்று வைத்து இணைக்கப்பட்டிருப்பதால் எவ்வளவு பெரிய எடை உள்ள வெடிமருந்துகளை வைத்தாலும் பீரங்கியை சேதப்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
பீரங்கியின் அளவு மற்றும் எடை:
இந்த பீரங்கி முகவாய் முதல் புட்டம் வரை 26 அடி நீளம் கொண்டது. பீரங்கியின் உருட்டுருளைக் குழாயின் விட்டம் 300 மி.மீ ஆகும். பீரங்கி 150 மி.மீ உட்சுவர் கனம் கொண்டது.இந்த பீரங்கி மொத்த எடையானது 27 ஆயிரம் கிலோ கிராம், அதாவது 27 டன் எடையை கொண்டது. மேலும், உலகளவில் உள்ள பீரங்கியில் முக்கியமான பீரங்கியாக கருதப்படுகிறது.
தமிழர்களுக்கு சொந்தமான தொழில்நுட்பம்:
இந்த பீரங்கி உருவாக்க இரண்டு முக்கியமான தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாயக்க மன்னர் காலத்தில் செய்யப்பட்டதால் நாயக்க மன்னர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் அல்ல. முற்றிலுமாக தமிழர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். அதில், முதல் தொழில் தொழில்நுட்பமானது துருப்பிடிக்காத இரும்பு, இரண்டாவது தொழில்நுட்பமானது இந்த அனைத்து வளங்களையும் ஒன்றோடொன்று பற்ற வைக்கும் உருக்கு உலை இணைப்பு என கூறப்படும். இந்த தொழில்நுட்பமானது அக்காலகட்டத்தில் தமிழர்களால் கொண்டுவரப்பட்டது. அதனால் தான் பீரங்கியை இவ்வளவு வலிமையானதாக உருவாக்கமுடிந்தது.
மேலும் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்கு பின்னால் சரபோஜி மன்னர் மராட்டிய மகாராஜாவாக இருக்கும்போது, ‘சரபராஜ’ விலாசம் என புத்தகம் எழுதப்பட்டு தஞ்சாவூர் அரண்மனை கொத்தளத்தில் அக்கினி இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு தொழில்நுட்பம் மற்றும் வரலாறு கொண்ட இந்த பீரங்கிமேடானது முழுக்க முழுக்க தமிழர்களின் தொழில்நுட்பங்களாலும் சிந்தனைகளாலும் உருவாக்கப்பட்டது. இன்னும் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஏராளமான தொழில்நுட்பங்கள் மறைக்கப்பட்டுள்ளது. நாம் அவற்றை அறியாமல் வெளிநாடுகளில் இருக்கும் தொழில்நுட்பத்தையே போற்றுகிறோம் என அப்பகுதியில் சிலர் கூறுகின்றனர்.
1 Comment
THANKS FOR INFORMACTION