தமிழகத்திலேயே தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி செயற்கை கால், கைகள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில் 14 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்தில் செயற்கை கால்களை முதல்வர் ரவிக்குமார் வழங்கினார். செயற்கை கால் உபகரணங்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுரக நவீன செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
துணை முதல்வர் ஆறுமுகம், நிலைய மருத்துவர் செல்வம், உதவி நிலைய மருத்துவர் முகமதுஇத்தரீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத்துறை தலைவர் டாக்டர் குமரவேல் வரவேற்றார். இதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் கலந்துகொண்டு, 14 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்களை வழங்கினார்.
தஞ்சையில் உற்பத்தி இந்த செயற்கை கால்கள் அனைத்தும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இதற்கான அனைத்து உபகரணங்களும் வழங்கி, மருத்துவக்கல்லூரியில் இயங்கும் செயற்கை அவயங்கள் உருவாக்கும் நிலையத்தில் செய்யப்பட்டவை ஆகும்.இங்கு கடந்த 2½ மாதங்களாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலானது.
தற்போது செயற்கை கால் உபகரணங்கள் ஒருவருக்கு 3 நாளிலேயே பொருத்தப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத்துறை நிபுணர்கள் பாலமுரளி, ரமேஷ், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட மாவட்ட அலுவலர் ராஜா மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் முதலிடம் இந்த நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் பேசுகையில், “தஞ்சை மருத்துவக்கல்லூரி மூலம் இதுவரை 139 பேருக்கு செயற்கை கால் மற்றும் கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 20 பேருக்கு செயற்கை கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 31 செயற்கை கால்கள், தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலேயே தயார் செய்து பொருத்தப்பட்டுள்ளன.மீதமுள்ள உபகரணங்கள், வெளி இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டவை ஆகும்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உற்பத்தி செய்து தற்போது 3-வது முறையாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி தான் செயற்கை கை, கால்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
1 Comment
THANKS FOR INFORMACTION