தஞ்சை கீழவாசல் சரபோஜி சந்தை
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தஞ்சை கீழவாசல் சந்தையில் சுமார் 308 கடைகள் கட்டப்பட்டு பொது பயன்பாட்டுக்கு திறந்து விட பட்டுள்ளது.
சரபோஜி சந்தை என பெயரிடப்பட்டு கீழவாசல் சந்தை வளாகமே ஒரு புது பொலிவுடன் காணப்படுகிறது.
சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில்தான் தஞ்சையின் மொத்த மளிகை பொருட்கள், எண்ணெய், நாட்டு மருந்துகள், காய்கறி, பூக்கள் உள்ளிட்ட அனைத்துவகை பொருட்களின் வணிகம் மொத்தமாகவும், சில்லரையாகவும் ஏகபோகமாக நடைபெறும்.
மழைக்காலங்களில் சந்தை சேறும் சகதியாய் மட்டுமல்ல வாகன போக்குவரத்து நெரிசலான பகுதியாகவும் காணப்படும்.
ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ் நீண்ட நெடிய பார்க்கிங் வசதி கடைகளை சுற்றிலும் அமைக்கப்பட்டு வணிக வளாகம் மிகவும் சுகாதாரமாகவும் விசாலமான இடவசதியுடனும் காணப்படுகிறது.
இதில் ஏறத்தாழ 35 கடைகள் ஜூன் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு, வணிகம் தொடங்கப்பட்டது.