தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா தெக்கூர் பஞ்சாயத்தை சேர்ந்தது குலாலர் தெரு கிராமம். இந்த கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக பரம்பரை பரம்பரையாக பானை மற்றும் குதிரை, யானை போன்ற பல்வேறு வகையான மண் கலை பொருட்களை செய்து வரும் கிராமத்தினர்.
இந்த குலாலர் எனும் கிராமத்தில் பல்வேறு குடும்பங்கள் வசிக்கின்றனர். அதில் நிறைய குடும்பங்கள் இந்த பானை தொழிலையே ஆண்டாண்டு காலங்களாக செய்துவருகின்றனர்.அதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 71 வயதான பானை செய்யும் தொழிலாளி முத்துவிடம் பேசும்போது அவர் கூறுகையில், ‘என் பெயர் முத்து வேளார். நாங்கள் வேளாளர் வகையினை சேர்ந்தவர்கள்.
வேளாளர்கள் உருவான காலத்திலிருந்தே நாங்கள் இந்த பானை தொழிலை செய்து கொண்டு இருக்கின்றோம் . நான் என் அப்பாவிடம் கற்றுக்கொண்ட பிறகு கிட்டத்தட்ட 60 வருடங்களாக இந்த மண் தொழிலை நான் செய்து கொண்டிருக்கின்றேன். இந்த தொழிலை செய்வதற்கு சிரமமாக இருந்தாலும் பரம்பரைத் தொழிலாக இருப்பதால் அதை விட்டுக்கொடுக்காமல் இத்தனை ஆண்டு காலங்களாக நான் செய்து கொண்டிருக்கிறேன்.
1 Comment
THANKS FOR INFORMACTION