தஞ்சை பெரிய கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர்களில் இருந்து வந்து செல்கிறார்கள்..அதுவும் வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.
அதற்குறிய அடிப்படை வசதிகள் இருந்தும் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது.
கட்டணமில்லா கழிப்பறை ஒன்று தொல்லியல் துறை அலுவலக வளாகத்தில் இருக்கிறது.அதில் அடிக்கடி வடிகால் நிரம்பி உபயோகிக்க முடியாத நிலையில் உள்ளது.அதன் வழி காட்டி பலகை தான் கீழே உள்ள புகைப்படம்.
தினமும் கோயிலுக்கு சென்று வரும் போது நிறைய வெளியூர் பக்தர்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்..
இதை விட்டால் கோயிலுக்கு வெளியே சுமார் அரை கிமீ தூரத்தில் கார் நிறுத்துமிடத்தில் தான் கட்டணக்கழிப்பிடம் உள்ளது.
அதேபோல் RO water provision கோயில் உள்ளே இருக்கிறது.அதுவும் நிரந்தரமாக வேலை செய்வதில்லை .அவ்வப்போது தான் வேலை செய்கிறது.
தஞ்சை மாவட்ட நிர்வாகம் தஞ்சை மாவட்ட பொறுப்பு மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் இந்த விசயத்தில் தலையிட்டு
பக்தர்களின் அடிப்படை வசதிகளை சரி செய்து தர பக்தர்கள் விரும்புகிறார்கள்.
ஆவண செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்….