மேட்டூரில் உபரி நீர் திறக்கப்படுகிறது.வழக்கம் போல் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் பாய்ந்தோடி கடலில் கரைந்தும்..கலந்தும் போகும்! ஆனால்,மக்களின் கோரிக்கையோ உப்பு நீராய் கரைந்து போகும்! நீர் நிலைகளை சரியாக வைத்திருக்கும் அரசு என்கிற பெயரை எந்த அரசும் தக்க வைத்துக் கொள்ளப் போவதில்லை என்பதே நிதர்சன உண்மையாக இருக்கிறது !
ஏரி குளங்கள் ஏன் இன்னும் நிரம்பவில்லை ? இனியாவது நிரம்புமா?.! காவிரி கரையோரம் தஞ்சையில் புது ஆற்று ஓரம் 15 கிலோமீட்டர் தூரம் தென் பகுதியில் உள்ள குருங்குளம் மேல்பாதி ,கீழ்பாதி மற்றும் திருக்கானூர்ப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி குடிநீர் இதுவரை கிடைக்கவில்லையே இது நிர்வாக தோல்விதானே?! இதுவரை எந்த அரசும் கண்டுகொள்ளாத ஒரு துர்பாக்கியம் இன்றளவும் தொடர்கிறது. ஒவ்வொரு தடவையும் மேட்டூர் அணை 120 அடியை எட்டும் போதும் பாவப்பட்ட மக்களுக்கு காவிரி தண்ணீரை குடிப்பது எப்போது என்கிற கேள்வி எழுந்து கொண்டேதான் இருக்கிறது! வறட்சியான தஞ்சையின் தென் பகுதி தஞ்சையிலிருந்து வெறும் 15 கிலோமீட்டர் அளவே உள்ளது.எனவே இங்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி பலமுறை அரசியல்வாதிகளிடமும்..ஆட்சியாளர்களிடமும் முறையீடு செய்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. அதன் வெளிப்பாடு இந்த பதிவு. இங்கு உள்ள பலருக்கு தண்ணீரால் கிட்னி பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இதில் இங்கு அரசின் நிறுவனமான அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை அமைந்துள்ளது ஆலைக்கு தேவையான தண்ணீரும் நிலத்தடியில் இருந்தே உறிஞ்சப்படுகிறது.ஒருவேளை காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இந்த பகுதிகள் பலன் பெற்றால் சர்க்கரை ஆலைக்கு தேவையான தண்ணீர் கூட அதன் மூலம் நிவர்த்தி பெரும் நிலத்தடி நீர் பற்றாக்குறை இல்லாமல் பாதுகாக்கப்படும்.
ஏக்கம் தொண்டையை அடைக்கிறது ஆனால் காவிரித்தாயோ வறட்சி பகுதிகளை தவிர்த்து விட்டு கொள்ளிடம் வழியாக கடலில் கலக்க ஆயத்தமாகிறாள் என்பதுதான் வலியான உண்மை!
1 Comment
THANKS FOR INFORMACTION