திருப்பனந்தாளில் மிகவும் ஆபத்தான நிலையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். எனவே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பஸ் படிக்கட்டுகளில் பயணம் கொரோனா காலத்திற்கு பிறகு அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதனால் அரசு பஸ்களில் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் திருப்பனந்தாள் மற்றும் சோழபுரம் கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பஸ்களில் பள்ளி செல்கின்றனர்.
திருப்பனந்தாள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை நேரத்தில் இயக்கப்படும் பஸ்களில் மக்கள் கூட்டம் அதிக அளவு உள்ளது. குறிப்பாக பள்ளி மாணவ- மாணவிகள் பஸ்களில் அதிக அளவு பயணம் செய்கிறார்கள். கூட்ட நெரிசல் காரணமாகபஸ்களில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணிக்கின்றனர். இதனால் மாணவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.
திருப்பனந்தாள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல பள்ளி, கல்லூரிகள் உள்ளன. கூடுதல் பஸ்கள் சில மாணவர்கள் கூட்ட நெரிசல் காரணமாக பஸ்களின் கூரைகளிலும் ஏற முயற்சிக்கின்றனர். இதனால் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களுக்கும் கண்டக்டர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை போலீசார் எச்சரிக்கிறார்கள்.
ஆனால் ஆதே நேரத்தில் காலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கினால் இந்த நிலை மாற வாய்ப்பு உள்ளது.குறிப்பாக திருப்பனந்தாளில் இருந்து பந்தநல்லூர், குறிச்சி, திருப்பனந்தாள், அணக்கரை, சோழபுரம் பகுதிகளுக்கு காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Comment
THANKS FOR INFORMACTION