தமிழ் மாதங்களில் ஆடி என்பது ஆன்மிக சிறப்பு மிகுந்த பக்தி மாதம். ஆடி மாதத்தில் ஆடிவெள்ளி, வரலட்சுமி விரதம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடித்தபசு என ஆடி மாதமே கோலாகலமாக இருக்கும்.
ஆடி மாதத்தை சக்தி மாதம் மற்றும் அம்மன் மாதம் என்று அழைப்பார்கள்.ஆடிமாதம் முழுவதுமே அம்மன்களுக்கு உகந்த மாதம் ஆகும்.
அதுவும் குறிப்பாக ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகவும், ராகு காலத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும், மாங்கல்ய தோஷம் நீங்கும், திருமண தடைகள் விலகும், ஆயுள் விருத்தியாகும் என்பதால் பெண்கள் பல கோவில்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு விளக்கேற்றி அம்பாளை தரிசனம் செய்வது வழக்கம்.
1 Comment
THANKS FOR INFORMACTION