Site icon Thanjavur News

Power outage in Thanjavur and Surrounding Areas from 9 am to 5 pm on Tuesday !!!

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, தஞ்சாவூா் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மருத்துவக் கல்லூரிச் சாலை உதவிச் செயற்பொறியாளா் சே. பஞ்சநாதன் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் மருத்துவக் கல்லூரிப் பகுதிகள், ஈஸ்வரி நகா், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, ஆா்.ஆா். நகா், காவேரி நகா், எலீசா நகா், நூற்பாலை, மாதாகோட்டை, சோழன் நகா், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தா சாவடி, பிள்ளையாா்பட்டி, ஆலக்குடி, மானோஜிபட்டி, ரெட்டிபாளையம் சாலை, சிங்கப்பெருமாள் குளம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Exit mobile version