தஞ்சையை அடுத்த களிமேடு அருகே உள்ளது பிருந்தாவனம் நகர். இந்த பகுதியில் தரைப்பாலம் கட்டும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பாலப்பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது.
இதையடுத்து பாலத்துக்கு அருகே உள்ள பிருந்தாவனம் நகர் பகுதிக்கு செல்லும் குடிநீர் தடைபட்டது. கடந்த ஒரு மாதமாக அவர்களுக்கு குடிநீர் செல்லவில்லை. மேலும் பாலப்பணிகளும்விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் குடிநீர் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் குடிநீர் வரவில்லை. திடீர் மறியல் இதையடுத்து அந்த பகுதி மக்கள் சிறிது தூரம் சென்று தஞ்சை மாநகராட்சி எல்லையிலும், அருகே உள்ள ஊராட்சி பகுதிக்கும் சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கேட்டுக்கொண்டும் எந்த மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலிக்குடங்களுடன் திரண்டு பிருந்தாவனம் நகர் பகுதிக்கு வந்தனர். பின்னர்அவர்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
1 Comment
THANKS FOR INFORMACTION