டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
சிட்னி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பேட்டிங் அதிரடியால் 179 ரன்களை குவித்தது.
பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் 39 பந்துகளை எதிர்கொண்டு 53 ரன்களை விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். இதற்கு முன்பு யுவராஜ் சிங் 33 சிக்சர்கள் அடித்திருந்தார்.
தற்போது ரோகித் சர்மா 34 சிக்சரை அடித்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக இந்த பட்டியலில் கிறிஸ் கெயில் 63 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.