பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கம் புதிய படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியது.
இது கோலார் தங்க வயலில் வரலாற்று பின்னணியில் எடுக்கப்படுகிறதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில் படத்திற்கான தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தங்க வயலின் வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு தங்கலான் என பெயர் வைத்துள்ளனர். இந்த தலைப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியுள்ளது.