சிறுநீரகம் சார்ந்த உபாதைகளுடன் கூடிய சர்க்கரை நோயாளிகள் பலருக்கும் குமட்டல், பசியின்மை, சளித்தொல்லை போன்ற அறிகுறிகளில் நெல்பொறி சிறந்த உணவாகப் பயன்படும்.
நூற்றி ஐம்பது கிராம் நெல்பொறியில் சுக்கு, தனியா மற்றும் கண்டந்திப்பிலி ஆகியவற்றை வகைக்கு மூன்று முதல் ஐந்து கிராம் வரை சேர்த்து அரை விட்டர் தண்ணீரில் கலந்துக் காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி, சிறிது இந்துப்பு கலந்து, வெதுவெதுப்பாக, காலையில் சிறிது சிறிதாகப் பருகினால், குமட்டல் நின்று பசியும் நன்றாக எடுக்கும். சுக்கும் கண்டந்திப்பிலியும் சளியை நன்றாகக் கண்டிக்கும். உடல் லேசானதாகத் தோன்றும், சுறுசுறுப்புடன் செயலாற்ற உதவும்.
சர்க்கரை மற்றும் சிறுநீரக உபாதை இல்லாமல் காய்ச்சலுடன் கூடிய குமட்டல், பசியின்மை, சளி உபாதை உள்ளவர்களுக்கு இதேபோல பயன்படுத்தி குணமடையலாம்.
தீவிரமான தண்ணீர் தாகத்தால் நிறையத் தண்ணீர் அருந்தினாலும், நீர்வேட்கை குறையாமல் கஷ்டப்படுவர்கள், நெல்பொறியில் சர்க்கரை கலந்து, தண்ணீர்விட்டுக் காய்ச்சி, பொறி நன்றாக வெந்ததும் வடிகட்டி, குளிர்ந்த பிறகு, சிறிது சிறிதாகப் பயன்படுத்தலாம்.
இருநூறு கிராம் நெல் பொறியில் பத்து கிராம் சர்க்கரை கலந்து, அரை லிட்டர் தண்ணீரில் வேகவைத்து பாதியாக வற்றியதும் வடிகட்டிய பிறகு பயன்படுத்தலாம். சர்க்கரை சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் நாட்டுச் சர்க்கரையையோ, கல்கண்டையோ உபயோகிக்கலாம்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});பயணத்தின்போது ஏற்படும் குலுக்கலால் ஏற்படும் வாந்தி உபாதைக்கு, நெல் பொறித்தூளை சுமார் நூறு- நூற்று ஐம்பது கிராம் வரை எடுத்து, பத்து கிராம் கருப்பட்டித் தூளைக் கலந்து வைத்து கொண்டு, சிறிது சிறிதாக வாயில் போட்டுச் சாப்பிட்டால் , வாந்தி நன்றாக மட்டுப்படும். பயணம் இனிமையாகவும் இருக்கும்.
அடிக்கடி வயிறு கெட்டுப் போய், இரண்டு மூன்று தடவை நீர்ப்பேதியாக அவதியுறுபவர்கள், நெல் பொறித்தூளை சிறிய அளவில் எடுத்து, தயிருடன் கலந்து சாப்பிட்டால், பேதியானது நின்றுவிடும். பித்தத்தினால் ஏற்படும் பேதிக்கு இது மிகவும் நல்லது. காலை, மதியம் என ஒருநாளில் இரு வேளை சாப்பிடலாம்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நல்ல கட்டுக்குள் வைத்திருக்க, நெல்பொறி சிறந்த உணவுப் பண்டமாகும். நூறு கிராம் பொறியைத் தூளாக்கி, இரு நூறு மில்லி மோருடன் கலந்து, ருசிக்காக சிறிது இந்துப்பு சேர்த்து, காலையில் சாப்பிட உகந்தது.
உடல் பருமனைக் குறைக்கவும், உடலிலுள்ள துர்மேதஸ் எனும் ஊளைச் சதையைக் குறைக்கவும், காலை உணவாக நெல் பொறிக் கஞ்சி குடிக்கலாம். மேற்குறிப்பிட்ட வகையில், மோருடன் பருகலாம். இதைச் சாப்பிட்ட பிறகு, காலை உணவாக வேறு எந்த உணவையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
மார்பில் சளி, நாக்கில் ருசியின்மை, தலைபாரம், மூக்கொழுகுதல் போன்ற கபம் சார்ந்த உபாதைகளில் நெல்பொறியைப் பொடித்து தேன் கலந்து காலையில் சாப்பிடலாம். சுமார் பத்து கிராம் தூளுடன், இருபது மில்லி தேன் கலந்து, சிறிது சிறிதாகச் சாப்பிட்டு வரலாம்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});பித்தத்தினால் ஏற்படும் புகைச்சலுடன் கூடிய இருமல், நாவறட்சி, வாய் வேக்காளம், தொண்டை எரிச்சல் ஆகியவற்றில் நெல்பொறித் தூளை பத்து கிராம் அளவில் எடுத்து, இருபது மில்லி உருக்கிய பசு நெய்விட்டுக் குழைத்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட, மிகவும் நல்லது.
பொதுவாக, நெல்பொறி பசியை நன்றாகத் தூண்டிவிடும். எளிதில் செரிக்கும். மேலாசன தன்மையுடையது. குளிர்ச்சியான வீர்யமுடையது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});