தஞ்சாவூர் மாநகராட்சி கொண்டு வரும் நகர மறுசீரமைப்பு திட்டங்கள் பலவற்றை தங்களின் அரசியல் /மத செல்வாக்கை பயண்படுத்தி தடுத்து திட்டங்களையே முடக்கி வைக்கின்றனர். பாலங்களின் நீலம் அகலம் சிலருக்காக திருத்தப்படும் போது விபத்துகள் தடுக்கமுடியாதவையாக மாறி விடுகிறது.
40 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகை வாகன பெருக்கம் இன்று பல மடங்கு உயர்ந்த உள்ளது. அதற்கு ஏற்ப மாநகராட்சி திட்டம் வகுக்கும் போது அரசியல் பலத்தை பயண்படுத்தி அந்த திட்டங்களையே முடக்கும் வலிமை பெற்றவர்களாக ஆக்கிரமிப்பாளர்கள் உள்ளனர்.
தஞ்சாவூரில் மாநகராட்சி மற்றும் அரசாங்கம் எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை அனுபவித்து கொண்டு இருக்கும் கூட்டம் அதை தடுப்பதிலையே குறியாக உள்ளனர்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் உருவாக்கப்பட்ட மேம்பாலம் அது. இன்று பல பல மடங்கு அதிகமான வாகன / மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக இந்த இடங்கள் மாறிவிட்டது. காலை மாலையில் அந்த குறுகலான பாலத்தில் அதிக அளவு வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது.
இன்று காலை ஒரு பெண்ணின் தலையில் ஏறி இறங்கியது ஒரு பேருந்து. மண்ணை தூவி நசுங்கிய தலையை வழித்து எடுக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னரும் இதே பாலத்தில் ரோட்ரோலர் கட்டுபாடு இழந்து பின் நோக்கி வந்து ஒரு பெண் மேல் ஏறி இறங்கியது. அப்போதே நகராட்சி மாற்று பாலம் ஏற்படுத்தி இருந்தால் இன்று இன்னொரு உயிர் போயிருக்காது.
இதே வழியில் செல்லும் அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்கள்/அதிகாரிகள் இனி ஒரு உயிர் இழப்பு ஏற்படாதவாறு விரைந்து திட்டங்களை நிறைவேற்றுங்கள். சில நாட்கள் முன் மேயர் ஐந்து பாலங்கள் கட்ட திட்டம் உள்ளதாக அறிவித்தார் விரைந்து அதனை செயல்படுத்த வேண்டும். எங்களுக்கு மாநகரை ஆடம்பர அழகு படுத்துதல் தேவை இல்லை மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் போதும்.
காலை நேரம் டிக்கெட் பிடிக்க எமனாக திரியும் தனியார் பேருந்துகள் இனியாவது திருந்துங்கள். நகருக்குள் நீங்கள் செய்யும் அட்டூழியங்களில் இருந்து கடவுள் தான் காக்க வேண்டும்.