தஞ்சாவூர் மழை காரணமாக அழுகியதால் விளைச்சல் குறைந்துள்ளதால் தஞ்சையில் ஒரு கட்டு கொத்தமல்லித்தழை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் வாங்கும் திறன் குறைந்தது. இதனால் வியாபாரிகளும் வேதனை அடைந்தனர். கொத்தமல்லித்தழை கொத்தமல்லி இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும், சீரண சக்தியை எளிதாகவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
கொத்தமல்லியில் இலை முதல் தண்டுவரை அனைத்துமே மருத்துவ பயன்களை கொண்டது. சாம்பார், ரசம் போன்ற தமிழர்களின் சமையல்களில் இதன் விதைகளும் பயன்படுத்தப்படுகிறது.
கொத்தமல்லித்தழை நன்கு பசியை தூண்டுவதால் மக்களும் இதனை உணவுகளில் சேர்க்கின்றனர்.தஞ்சையில் உள்ள தற்காலிக காமராஜர் மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொத்தமல்லி விற்பனைக்கு வருகிறது. இதே போல் இந்த பகுதிகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். தஞ்சைக்கு மட்டும் 2 சரக்கு ஆட்டோக்களில் மல்லித்தழை கட்டுகள் வரும்.