Site icon Thanjavur News

For the 5th time, 50 houses are surrounded by water as the Kollidam river near Ayyampet has flooded.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் 5- வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் 5-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இரண்டு நாள்களுக்கு முன்பு மேட்டூர் அணை தனது முழு கொள்ளவை எட்டியவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீர், முக்கொம்பு மற்றும் கல்லணையை வந்தடைந்ததும் பெருமளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இந்நிலையில் அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க தொடங்கியது. இதனால் கொள்ளிடம் ஆறு கடல்போல் காட்சியளிக்கிறது.

இந்த வெள்ளப் பெருக்கால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளான அணைக்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு, உள்ளிக்கடை ஆகிய கிராமங்களின் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஒடுகிறது.

இதனால் பட்டுக்குடி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. குறிப்பாக பழைய மன்னியாறு பகுதியில் ஏராளமான வயல்கள் இந்த தண்ணீரில் மூழ்கியது. இப்பகுதிகளில் தற்போது நடவு செய்து அறுவடைக்கு தயாராக உள்ள குறுவை நெல் பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கியது.

Exit mobile version