தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைமுறைக்கு வருகிறது. இனி ரேஷன் கடைகளில் பணம் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டியதில்லை. upi மூலமாக இனி ரேஷன் கடைகளில் உங்கள் செல்போனைப் பயன்படுத்தியும் பொருட்களை வாங்கலாம்.பொது மக்களின் வசதிக்காக அடிக்கடி ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக சில பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வருமானத்தை உயர்த்தவும், பொது மக்களின் வசதிக்காகவும் ஆவின் பொருள்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.