பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Deputy Engineer/ E-II Grade பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Deputy Engineer/ E-II Grade பதவிக்கு என மொத்தம் 24 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.Tech/ B.sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ரூ.600 + 18% GST = ரூ.708/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.10.2022 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.