தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பலர் முறைகேடு செய்து வருகின்றனர். அத்துடன் நீதிமன்றத்தில் அரசு ஊழியரின் மீது உள்ள வழக்குகள் பல நிலுவையில் உள்ளது. அதனால் அரசு ஊழியர்களின் மீது துறை வாரியாக கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் பெரும்பாலும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் முறைகேடு செய்கின்றனர். இதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பல வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் மீது துறை வாரியாக நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து தற்போது அரசு ஊழியர்கள் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதாவது, ஒரே நேரத்தில் அரசு ஊழியர் செய்யும் முறைகேடுக்கு குற்ற வழக்கு தொடர்பான நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு ஊழியர் முறைகேட்டில் ஈடுபட்டால் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேலும் நீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருக்க வேண்டிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தால் அனைத்து ஆவணங்களையும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். இதையடுத்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினரிடம் இருந்து ஆவணங்களை பெற்று நகல் எடுத்து நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டால் அரசு ஊழியர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட ஊழியர் ஆஜராக மறுத்தால் அல்லது எழுத்துப்பூர்வமான அறிக்கை சமர்ப்பிக்கவில்லையெனில் இதற்கு எக்ஸ்பெர்ட் உத்தரவை அந்த துறை அதிகாரி பிறப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1 Comment
THANKS FOR INFORMACTION