தஞ்சாவூர் மாநகராட்சி 30 வார்டில் தூய்மை பாரதம் அமைப்பில் சார்பிலும் தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் இணைந்து
பிளாஸ்டிக் இல்லா தஞ்சை மாநகராட்சி உருவாக்கிட மார்கழி மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வுக்கான கோலப்போட்டி நடைபெற்றது
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக பட்டு சேலையும் இரண்டாம் பரிசாக 10 கிராம் வெள்ளி நாணயமும் மூன்றாம் பரிசாக எவர்சில்வர் பாத்திரமும் மற்றும்
ஆறுதல் பரிசாக எட்டு மகளிர்களுக்கு சேலைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
மேலும் எனது பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களின் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது
அனைத்து நிகழ்வுகளிலும் தஞ்சை மாநகராட்சி நல அலுவலர் திருமிகு சுபாஷ் காந்தி அவர்களும் சுகாதார ஆய்வாளர் திரு செல்வமணி அவர்களும் மேற்பார்வையாளர் திரு பாலகிருஷ்ணன் அவர்களும் மற்றும் முன்னோடிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அனைவருக்கும் இனிப்பு மற்றும் கேக் வழங்கிய தருணம்.
என்றும் சமூக சேவையில் மக்கள் நலனில் உங்களில் ஒருவன் யூ என் கேசவன் மாமன்ற உறுப்பினர்