68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் “சூரரைப் போற்று” திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, பின்னணி இசை, திரைப்படம், திரைக்கதை உள்ளிட்ட 5 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த தமிழ் படமாக வசந்த் இயக்கிய “சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்” தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் தமிழ் படங்கள் மட்டும் 10 விருதுகளை வென்றுள்ளன.
2020 ஆம் ஆண்டில், கோவிட் 19 தொற்று காரணமாக பல மாதங்கள் திரையரங்குகளை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வழக்கத்தை விட குறைவான படங்கள் வெளியாகின. அவற்றுடன் புதிய திரைப்படங்களும் நேரடியாக OTT தளங்களில் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில், 2020ம் ஆண்டுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகளை புதுதில்லியில் அறிவித்தனர்.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியான படம் “சூரரைப் போற்று”. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில், சிறந்த திரைப்படம் (சூரரைப் போற்று), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த பின்னணி இசை (ஜி.வி. பிரகாஷ்) மற்றும் சிறந்த திரைக்கதை (சுதா) ஆகிய 5 தேசிய விருதுகளை “சூரரைப் போற்று” பெற்றது. கொங்கரா).
1 Comment
THANKS FOR INFORMACTION