கொரோனா வருகையால், அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் சென்ற ஆண்டின் மத்தியில் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வர வாய்ப்புள்ளது.
அகவிலைப்படி (DA) 4% உயர்வு;
அடுத்த மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். அகவிலைப்படி (DA) என்பது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் அகவிலை நிவாரணம் (DR) ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை மத்திய அரசு திருத்தி அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஜனவரியில், 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவித்தது. அதாவது ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் ஏஐசிபிஐ முறையே 125.1 மற்றும் 125 ஆக இருந்தது, மார்ச் மாதத்தில் அது 126 ஆக உயர்ந்துள்ளது. இப்போது, ஏஐசிடிஐ உயர்ந்துள்ள நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் டி ஏ 4 சதவீதம் வரையில் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 34 சதவீதம் டிஏ வழங்கப்படுகிறது. விரைவில் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டால், அவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து சுமார் 38 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். இதை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு கணிசமாக சம்பள உயர்வும் இருக்கும்.
1.குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:
- அடிப்படை சம்பளம் – ரூ 18,000
- தற்போதைய DA 34% – DA உயர்வு மாதத்திற்கு ரூ.6120
- புதிய DA 38 சதவீதம் – மாதத்திற்கு ரூ.6840 டிஏ உயர்வு
- அதிகரிப்பு – ரூ.6840- 6120 = ரூ.720 மாதத்திற்கு
- DA ஆண்டு சம்பள உயர்வு ரூ.720X12= ரூ.8640
2.அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:
- அடிப்படை சம்பளம் – ரூ.56900
- புதிய DA 38% – DA உயர்வு மாதத்திற்கு ரூ.21622
- தற்போதைய டிஏ 34 சதவீதம் – மாதத்திற்கு ரூ.19346
- DA அதிகரிப்பு ரூ.21622-19346= ரூ.2276 மாதத்திற்கு
- DA ஆண்டு அதிகரிப்பு – ரூ.2276 X12= ரூ.27,312
1 Comment
THANKS FOR INFORMACTION