தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இடைநிலை சுகதார பணியாளர்கள் உள்பட காலியாக உள்ள ஏராளமான செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகிறது. கிராமங்கள் முதல் நகர்புறங்கள் வரை மாவட்ட வாரியாக ஒவ்வொரு பணியிடங்களை நிரப்புவதற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தான் தற்போது தஞ்சாவூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலியிடங்கள் எவ்வளவு? தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள 140 செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இடைநிலை சுகதாார பணியாளர்கள் உள்பட காலியாக உள்ள 140 செவிலியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாத சம்பளம் எவ்வளவு? இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும். அதோடு செவிலியர் பட்டயபடிப்பு (DGNM) அல்லது இளங்கலை நர்சிங் (B.sc Nursing) படிப்பை முடித்திருக்க வேண்டும். இது ஒப்பந்த அடிப்படையிலான பணி என்பதால் மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் வரை வழங்கப்படும்.
கடைசி தேதி என்ன? தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் பூர்த்தி செய்து உரிய ஆவண நகல்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றுமு் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்துக்கு ஜனவரி 30ம் தேதி மாலை 6 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரடியாக அல்லது தபால் மூலம் அனுப்பலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‛‛செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் துணை இயக்குநர், துணை இயக்கநர் சுகாதார பணிகள் அலுவலகம், காந்திஜி ரோடு, Near LIC Building, தஞ்சாவூர், 613 001” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சந்தேகங்களுக்க 04362 – 273503 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.