Site icon Thanjavur News

Wonderful news for Pilgrims Visiting Tirupati. New Booking Procedure!

திருப்பதி: திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைக்கேடுகளை தடுக்க, வெப்கேம் பரிசோதனையுடன் கூடிய அதிநவீன முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையின் காரணமாக சாமானியர்கள் எளிதாக அறைகளை புக்கிங் செய்ய முடியும். ஒருவேளை யாராவது முறைகேடு செய்தால் முன்பணம் திரும்ப செலுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் பிரசித்த பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான பக்தா்கள் வருகிறார்கள். அப்படி வரும் பக்தர்கள் தங்குவதற்காக 7 ஆயிரம் அறைகள் கொண்டு தங்கும் விடுதியை திருப்பதி திருமலை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.


கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோடிக்கணக்கான பணத்தை தினமும் காணிக்கையாக கொட்டுகிறர்கள். அப்படி பக்தர்களால் கொடுக்கப்படும் பணம் மூலம் பக்தர்களுக்கு, தங்கும் விடுதி வசதி, அன்னதானம், கழிவறைகள், நிழற்கூடங்கள் என பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திருப்பதி திருமலையில் செய்யப்பட்டு வருகின்றன.


திருப்பதி அறை வாடகை
குறிப்பாக ஏழை எளிய மக்கள் தங்குவதற்காக மிகக்குறைந்த விலையில் மிகத்தரமான விடுதி அறைகள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. ரூ.50, 100, 200 என்கிற அளவில் அறைகள் வாடகைக்கு தரப்படுகின்றன. கடந்த மாதம் நாராயணகிரி விருந்தினர் மாளிகையில் ரூ.750 ஆக இருந்த அறை வாடகை ரூ.1,700 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல் சிறப்பு வகை காட்டேஜ்களின் வாடகை ரூ.750ல் இருந்து ரூ.2200 ஆக உயர்த்தப்பட்டது.


கட்டணம் உயர்வு ஏன்
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை அறை வாடகையை திருத்தியமைத்து சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கடசி தலைவர்கள் மற்றும் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களிடையே அறைவாடகை உயர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தரிசனத்திற்கு வரும் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் கட்டண உயர்வால் பாதிக்கப்படுவார்கள் என்று புகார் எழுந்தது. ஆனால் இதனை மறுத்த திருப்பதி தேவஸ்தானம், கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கட்டணத்தை தான் உயர்த்தினோம் என்றும் SV ரெஸ்ட் ஹவுஸ் மற்றும் நாராயணகிரி ரெஸ்ட் ஹவுஸ் ஆகியவற்றை நவீனப்படுத்தியதாகவும், பக்தர்களின் தேவைக்கேற்ப கட்டணத்தை திருத்தியதாகவும் கூறி நியாயப்படுத்தியது.


கட்டணம் ரத்து

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைக்கேடுகளை தடுக்க, வெப்கேம் பரிசோதனையுடன் கூடிய அதிநவீன முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை தேவஸ்தான நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது. அதன்படி, தங்கும் அறைக்கான ரசீதை வாங்குவோரின் முகம் வெப்கேமராவில் படம் பிடிக்கப்படுகிறது.

தரிசனம் முடிந்து அவர்கள் அறைகளை காலி செய்யும் போது, வேப்கேமராவில் பதிவான அதே நபர் இருந்தால் மட்டுமே முன்பணம் திரும்ப செலுத்தப்படும். வேறொரு நபர் அறையை காலி செய்வதாக கூறினால், முன்பணம் திரும்ப செலுத்தப்படாது இதனால், தரகர்களை நம்பி பணம் செலவழிப்பது தவிர்க்கப்படும் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


42 டன் நாணயங்கள்
இதனிடையே திருப்பதி அருங்காட்சியகத்தில், 4,000 கலைப் பொருட்களுடன் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதேபோல, வெங்கடாஜலபதி கோவில் உண்டியல் மூலம் கிடைத்த, அரிய வகை நாணயங்களைக் கொண்டு, அருங்காட்சியகம் அமைக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது.

கிட்டத்தட்ட 42 டன் நாணயங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளனவாம். இவைகளை பிரித்தாய்ந்து, அதன்பிறகு அருங்காட்சியகம் அமைப்பதற்கான வேலைகள் துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.


தேவஸ்தானம்
அதேபோல, லட்டு தயாரிப்பை நவீனப்படுத்துதலிலும் தேவஸ்தானம் கவனத்தை திருப்பியுள்ளது.. இதற்காக டாடா பவுண்டேஷனும், ரிலையன்ஸ் குழுமமும் 50 கோடி ரூபாய் மதிப்பில் தானியங்கி இயந்திரங்களை வழங்க உதவிக்கரம் நீட்டி இருக்கிறது.இதன்மூலம் லட்டுகளின் தரத்தையும், அளவையும் அதிகரிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

இதனிடையே காட்டேஜ்களை புனரமைக்கும் வேலைகளை முடுக்கிவிடவும் தேவஸ்தானம் திட்டமிட்டு இருக்கிறதாம். சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்கள் தங்கும் வகையில் புதிதாக ஒரு வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Exit mobile version