Site icon Thanjavur News

Turmeric Crops are Ready for Harvest at Thirukkattupalli.

திருக்காட்டுப்பள்ளியில் அறுவடைக்கு தயாராக மஞ்சள் பயிர்கள் உள்ளன. இந்த மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா்.

பொங்கல் பண்டிகை தைப்பொங்கல் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு திருநாள். இத்திருநாள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்படும். புதிய மண் பானையில் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து கட்டி, மண் அடுப்பில் விறகு மூலம் புத்தரிசி, வெல்லம் போட்டு பொங்கலிட்டு, பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு, பொங்கல் வைப்பார்கள். சர்க்கரை பொங்கல் மட்டும் இல்லாமல் வெண்பொங்கலும் சமைப்பார்கள்.

பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, ஆகியன முக்கியமானவை ஆகும். விவசாயிகள் நம்பிக்கை திருக்காட்டுப்பள்ளி பகுதியில் காவிரி கரையோரம் உள்ள வளப்பகுடி உள்ளிட்ட பல கிராமங்களில் பொங்கல் கரும்பு பயிரிட்டு தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.

இதைப்போல பொங்கல் பானையை சுற்றி கட்டப்படும் மஞ்சள் கொத்து வளப்பகுடியில் பயிர் செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. மஞ்சள்கொத்து பசுமையாக கட்ட வேண்டும் என்பதற்காக பொங்கல் நாளுக்கு முதல் நாளில் இருந்து விற்பனைக்கு வரும்.

கடந்தஆண்டு ஒரு ஜோடி மஞ்சள் கொத்து அதிக பட்சமாக ரூ.40-க்கு விற்பனை ஆனது. பொங்கல் நாளன்று ரூ. 20-க்கு விற்பனை ஆனது. இந்தஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் மஞ்சள் கொத்து விற்பனையும், விலையும் நல்ல நிலையில் இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்்கையுடன் உள்ளனர்.

Exit mobile version