Site icon Thanjavur News

The Arumugasamy Commission has completed the inquiry into the death of the late former Tamil Nadu Chief Minister Jayalalithaa.

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணையை முடித்த ஆறுமுகசாமி ஆணையம், அதன் அறிக்கையைக் கடந்த ஆகஸ்டில் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, அந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா இறந்த தேதி இன்றுவரை 2016, டிசம்பர் 5 என்று கூறப்பட்டுவந்த நிலையில், ஆறுமுக ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், டிசம்பர் 4-ம் தேதி பிற்பகல் 3 மணிமுதல் 3:50 மணிக்குள் ஜெயலலிதா இறந்ததாக சாட்சியங்கள் கூறியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் ஜெயலலிதா மரணத்தில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

மேலும், `சில அதிகாரம் பெற்றோருக்கு உதவ, அப்போலோ மருத்துவமனை மருத்துவர் பாபு ஆபிரகாம்,ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்குவதை தள்ளிப்போடலாம்’ என்று இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்ததாக தந்திரம் செய்திருக்கிறார்.

தவிர்க்க முடியாத அனுமானம் என்னவெனில், ஜெயலலிதாவுக்கு சரியான நேரத்தில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க, சசிகலாவால் திறமையாக உத்தி கையாளப்பட்டிருக்கிறது” எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட தகவல்கள் எல்லாம் சசிகலாவால் ரகசியமாக வைத்துக்கொள்ளப்பட்டதாகவும், பிரிந்து சென்ற சசிகலாவை மீண்டும் இணைத்தப் பிறகு, ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையில் சுமூகமான உறவு இல்லையென்றும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சசிகலாவை குற்றம்சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது. மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரை செய்கிறது.

Exit mobile version