Site icon Thanjavur News

Thanjavur Kundavainachiar Government College of Arts for Women Counseling for admission will start on the 5th.

தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தினமும் காலை 9 மணிக்கு நடக்கிறது.

இந்த கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவிகள் அவர்கள் விண்ணப்பிக்கும்போது அளித்துள்ள செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு சேர்க்கைக்கான விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. கல்லூரியில் உள்ள 14 பாடப்பிரிவுகளில் மொத்தம் உள்ள 1,224 இடங்களுக்கான மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கீழ்கண்டவாறு நடைபெறும்.

மாணவிகள் அனைத்து அசல் சான்றிதழ்கள், 3 நகல்கள், சிறப்பு கட்டணம் ஆகியவற்றுடன் வர வேண்டும். வருகிற 5-ந் தேதி சிறப்பு ஒதுக்கீடு (விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி) மாணவிகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. 6-ந் தேதி பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.சி. கணிதம், பி.எஸ்.சி. கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 8-ந் தேதி பி.ஏ. தமிழ், பி.ஏ. வரலாறு, பி.பி.ஏ., பி.எஸ்.சி. வேதியியல், பி.எஸ்.சி.

இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கும், 10-ந் தேதி பி.எஸ்.சி. தாவரவியல், பி.எஸ்.சி. விலங்கியல், பி.எஸ்.சி. பொருளாதாரம், பி.எஸ்.சி. புள்ளியியல், பி.எஸ்.சி. நிலவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. மாணவிகள் மட்டுமே கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

மாணவிகள் முககவசம் அணிந்து வர வேண்டும் என கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version