தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முதல்வர் ரோசி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே மன்னர் சரபோஜி அரசுக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 2022-23 -ம் கல்வி ஆண்டில் இளநிலை (பி.லிட், பி.ஏ., பி.எஸ்சி, பி.காம்., பி.பி.ஏ.) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெற உள்ளது. விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான பாடப்பிரிவுகளும், அதற்கான தேதிகளும் கல்லூரி இணைய தளத்தில் (www.rsgc.ac.in) வெளியிடப்பட்டுள்ளன.
கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இத்தகவல் குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.