Site icon Thanjavur News

Thanjavur District Collector Dinesh Bonraj Oliver said that Rs 16 crore has been allocated!

குறுவை தொகுப்பு திட்டம் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்தவும், நடப்பு தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரவும், பல்வகை பயிர் சாகுபடியை ஊக்குவித்திடவும், பரிந்துரைக்கப்பட்ட உயர் விளைச்சல் நவீன தொழில் நுட்பங்களை கொண்டு நெல் உற்பத்தி திறனை அதிகப்படுத்திடவும், டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் குறுவை தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.16 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நெல் சாகுபடியை ஊக்குவித்திட 50 சதவீதம் மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் மற்றும் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் மானியத்தில் மாற்றுப்பயிர் சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.

உரங்கள்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு பயனாளிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி. மற்றும் ½ மூட்டை பொட்டாஷ் ஆகிய உரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் குறுவை பருவத்தில் மாற்றுப்பயிர்களான சிறுதானியங்கள், பயறுவகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பாக பொதுப்பிரிவினருக்கு 50 சதவீதம் மானியம், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 70 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது

உழவன்

செயலி மூலம்… இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இதற்காக அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் குறுவை தொகுப்பு திட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version