Site icon Thanjavur News

Thanjavur A kilo of lemon is sold at Rs 120, and a fruit at Rs 10.

தஞ்சையில் ஒரு கிலோ எலுமிச்சைப்பழம் ரூ120-க்கும், பழம் ஒன்று ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எலுமிச்சைப்பழம் பழங்காலம் முதலே பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு எலுமிச்சைப்பழம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் எலுமிச்சை பயிரிடப்படுகிறது. எல்லாகாலங்களிலும் எலுமிச்சைப்பழம் கிடைக்கிறது. கோடை காலங்களில் சர்பத் உள்ளிட்ட குளிர்பானம் தயாரிப்பதற்கு எலுமிச்சைப்பழம் பெரிதும் பயன்படுவதால் மற்ற காலங்களைவிட கோடை காலங்களில் இதன் தேவை அதிகமாக உள்ளது.

பல்வேறு சிறப்புகளை கொண்ட எலுமிச்சைப்பழம் விலை தஞ்சை காவேரி நகரில் உள்ள காமராஜர் தற்காலிக மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லறை கடைகளில் ஒரு பழம் ரூ.5 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் விலை அதிகரித்து கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சைப்பழம் நேற்று ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனைசெய்யப்பட்டது.

சின்னவெங்காயம்-முருங்கைக்காய் விலை உயர்வு அதே நேரத்தில் சில்லறை விற்பனை கடைகளில் பழத்தின் ரகத்திற்கு ஏற்றவாறு ஒரு பழம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து எலுமிச்சைப்பழ வியாபாரிகள் கூறியதாவது:- ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், சென்னை, ஒட்டன்சத்திரம், ஒசூர், திருச்சி, மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் எலுமிச்சைப்பழங்கள் தஞ்சை தற்காலிக மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

வெயில் காலங்களில் சர்பத் போன்றவற்றை செய்வதற்காக கடைக்காரர்கள் 4 கிலோ முதல் 5 கிலோ வரை வாங்கி செல்வார்கள். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்த அளவே உள்ளது. இதனால் எலுமிச்சைப்பழத்தை யாரும் விரும்பி வாங்குவதில்லை. மேலும் இந்த மழையால் எலுமிச்சைப்பழம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்து பெய்து வந்தால் மேலும் விலை அதிகரிக்கவாய்ப்பு உள்ளது என்றனர். இதே போல் கடந்த வாரம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்ட சின்னவெங்காயம் நேற்று ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Exit mobile version