Site icon Thanjavur News

Suryakumar Retains his top spot in the ICC T20 Rankings. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ்(869 புள்ளி) தற்போது அதை தக்கவைத்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 830 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் நியூசிலாந்தின் டெவோன் கான்வே 779 புள்ளிகளுடன் தனது மூன்றாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த வார நிலவரத்தின்படி டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தவிர இந்திய வீரர்களில் முதல் 10 இடங்களில் விராட் கோலி மட்டும் தான் இருந்தார்(10-வது இடம்). இந்த நிலையில் தற்போது அவர் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஐசிசி டி20ஐ பேட்டிங் தரவரிசை (நவம்பர் 9, 2022 நிலவரப்படி)

சூர்யகுமார் யாதவ் – 869 புள்ளிகள்

முகமது ரிஸ்வான் – 830 புள்ளிகள்

டெவோன் கான்வே – 779 புள்ளிகள்

பாபர் ஆசம் – 762 புள்ளிகள்

ஐடன் மார்க்ரம் – 748 புள்ளிகள்

டேவிட் மாலன் – 734 புள்ளிகள்

க்ளென் பிலிப்ஸ் – 697 புள்ளிகள்

ரெய்லி ரூஸோ- 693 புள்ளிகள்

ஆரோன் பின்ச் – 680 புள்ளிகள்

பதும் நிசாங்கா- 673 புள்ளிகள்

விராட் கோலி – 653 புள்ளிகள்

Exit mobile version