இந்தியாவில் ஏராளமான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். சிலிண்டர் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எல்பிஜி மானியம் 2023 இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மானியம் குறித்த தகவல்:
இந்தியாவில் கிராமங்கள்தோறும் ஏழை மக்கள் அனைவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய பாஜக அரசு உஜ்வாலா எனும் திட்டத்தை துவங்கியது.2020ம் ஆண்டுக்குள் 8 கோடி பேருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த நிதியாண்டில் இத்திட்டத்தின் 2.0 தொடங்கப்பட்டது. இதன் மூலம் சிலிண்டர், அடுப்பு ஆகியவை ஒரு கோடி பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டது. தற்போது வரை பிரதமரின் சிலிண்டர் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒரு வருடமாக சிலிண்டர் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் அரசு தரப்பில் இருந்து வழங்கப்பட்டு வந்த மானியமும் வழங்கப்படவில்லை என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். முதலில் சிலிண்டர் வாங்கும் போது சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும். பின்னர் அதற்கான மானிய தொகையை அரசு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. கடந்த ஒரு வருடமாக மானியத்தொகை சரியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை என புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது.
அப்போது மத்திய அரசு மானிய தொகையை நிறுத்தி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நேரத்தில் இந்த நேரத்தில் மானியத் தொகையை அரசு நிபந்தைகள் அடிப்படையில் தகுதி உடையவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்தது. இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் மக்களை இலக்காகக் கொண்ட PM Ujjwala Yojana திட்டத்தின் கீழ் LPG மானியத்தை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் FY23 பட்ஜெட்டில் LPG மானியங்களுக்காக ரூ.5,800 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது , இதில் வீட்டு உபயோகத்திற்காக ரூ.4,000 கோடி நேரடி பலன் பரிமாற்றமும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ரூ.800 கோடியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.