Site icon Thanjavur News

Students in Educational institutions Must Wear a Face Mask – Chennai Corporation.

சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ள நபர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ள நபர்கள் உடனடியாக அருகிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தொற்று பாதித்த நபர்களுக்கும், தொற்றிற்கான அறிகுறியுள்ள நபர்களுக்கும் மாநகராட்சியின் சார்பில் இலவசமாக பாரசிட்டமால் 500 மி.கி., வைட்டமின் சி 500 மி.கி. மற்றும் ஜிங்க் 50 மி.கி. ஆகிய மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் தலா 500 மாத்திரை தொகுப்புகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version