Site icon Thanjavur News

Sivagangai Park has not seen its lustre even after 4 years due to the renovation work going on at a snail’s pace.

தஞ்சாவூர்; ஆமை வேகத்தில் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் 4 ஆண்டுகள் ஆகியும் சிவகங்கை பூங்கா பொலிவு பெறாமல் உள்ளதால் 150-வது ஆண்டுகள் கொண்டாட்டம் தடைபடுகிறது. எனவே பணியை துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிவகங்கை பூங்கா தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் சிவகங்கை பூங்கா உள்ளது. இந்த பூங்கா, பெரியகோவிலை ஒட்டியுள்ளது. இந்த பூங்காவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் சிவகங்கை குளம் உருவாக்கப்பட்டது. இதை சுற்றி பொதுமக்களுக்கான பூங்கா ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1871-72-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் காலத்துக்கேற்றவாறு அவ்வப்போது புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வந்துள்ளன.

www.Thanjavurnews.in

தஞ்சை பகுதி மக்கள் மட்டுமல்லாமல், வெளியூா் மக்களிடையேயும் இந்த பூங்கா பிரபலமானது. இதனால் பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவுக்கும் வந்து செல்வது வழக்கம். இதனால் இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் வந்து செல்வா். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

நீர் சறுக்கு பூங்காவில் ஏராளமான பசுமையான மரங்கள், புல்வெளிசெடிகள், மான்கள், ஒட்டகம், நரி, சீமை எலி, முயல், பறவைகள், கிளிகள் என ஏராளமாக விலங்கினங்களும், பறவைகளும் வளர்க்கப்பட்டு வந்தன. பின்னர் சிறுவர்களுக்கான ரெயில், தொங்குபாலம், படகு சவாரி, நீச்சல் குளம், அறிவியல் பூங்கா, நீர்சறுக்கு விளையாட்டுகளும் கொண்டுவரப்பட்டது.

150-ம் ஆண்டை எட்டும் இந்த பூங்காவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே10 லட்சம் மதிப்பில் புனரமைக்க மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. மேலும் ராஜராஜசோழன் காலத்தில் வெட்டப்பட்ட சிவகங்கை குளத்தை புனரமைப்பு செய்து, இன்னும் பல படகுகள் விட திட்டமிடப்பட்டுள்ளது.

www.thanjavurnews.in

இந்த குளத்தில் தனித்தீவு போன்ற அமைப்புடன் கூடிய கோவிலும் நவீனமயமாக்கப்பட உள்ளது. ஸ்மார்ட்சிட்டி பணி மேலும் நடைபாதையில் கற்கள் பதித்து, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாக்கும் திட்டம் உள்ளது. சிறுவா்களுக்கான புதிய ரெயில், ஸ்கேட்டிங் விளையாடுவதற்கான தளம் உள்ளிட்டவை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது. சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாக இந்த ஸ்மார்ட்சிட்டி பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி சிவங்கை பூங்கா மூடப்பட்டது. இந்த பணிகளை 18 மாதங்களில் முடிக்க மாநகராட்சி நிா்வாகம் இலக்கு நிா்ணயித்தது.

ஆனால், கிட்டத்தட்ட 4 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் பணிகள் ஆமை வேகத்தில் மட்டுமே நடந்து வருகிறது. கற்களால் நடைபாதை அமைக்கும் பணி கூட இன்னும் முழுமை பெறவில்லை.

அனுமதி இது குறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறும்போது, இந்த பூங்காவுக்கு அருகில் பெரியகோவில் இருப்பதால், அதனுடைய தோற்றத்தை மறைக்கும் விதமாக உயரமான கட்டிடம் உள்பட எந்த திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.

எனவே, இந்த பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட உள்ள ஸ்மார்ட்சிட்டி திட்டத்துக்கு இந்திய தொல்லியல் துறையின் அனுமதிக்காக மாநகராட்சி நிா்வாகம் அனுப்பி வைத்தது. சில திட்டங்களின் வடிவமைப்பை மாற்றி அமைக்குமாறும் தொல்லியல் துறை அறிவுறுத்தியுள்ளது.இதனால் திட்டத்தை மறு வடிவமைப்பு செய்து மீண்டும் தொல்லியல் துறைக்கு மாநகராட்சி நிா்வாகம் அனுப்பி வைத்தது.

இதனால் தான் சிவகங்கை பூங்கா பணி தொடங்குவதிலும் சரி, தற்போது பணிகள் மேற்கொள்வதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றனர்.இது குறித்து தொல்லியல்துறை அதிகாரி கூறும்போது, திருத்தி அமைக்கப்பட்ட திட்டம் தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதற்கு அனுமதி அளித்து பணிகளை மேற்கொள்ள தடையில்லா சான்று அளிக்கப்பட்டுள்ளது என்றார். மக்கள் கருத்து இது குறித்து மக்கள் கூறும்போது, தஞ்சையில் உள்ள முதன்மையான சுற்றுலா தலங்களில் இந்த பூங்காவும் ஒன்று. ஆனால், இந்த பூங்கா 4 ஆண்டுகளாக மூடிக் கிடப்பதால் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனா்.

இந்த திட்டத்துக்கு பிறகு பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தொடங்கப்பட்ட ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று நிறைவடைந்துவிட்டன. எனவே, இந்த பூங்காவும் அதிநவீன சாதனங்களுடன் விரைவில் திறக்கப்படும் என்ற எதிா்பாா்ப்புடன் இருந்த குழந்தைகள், தற்போது விரக்தியில் இருக்கின்றனா்.

எனவே இந்த பூங்காவில் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

Exit mobile version