Site icon Thanjavur News

Risk of Infection from Dumped Waste

அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டப்படும் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பை மேடாக காட்சி அளிக்கும் கழிவுகள் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் அதிராம்பட்டினம் நகர் பகுதியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் மகிழங்கோட்டை பிரிவு சாலைக்கு அருகில் பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் சாலையோரங்களில் குப்பைகள் தேங்கி குப்ைப மேடாக காட்சி அளிக்கிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் மேலும் இந்த கழிவுகளை நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் தின்று விட்டு ஆங்காங்கே போட்டு விட்டு சென்றுவிடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றி, தொற்றுநோய் பரவுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version