Site icon Thanjavur News

Power outage in Thanjavur tomorrow

ஒரத்தநாடு வட்டம் ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறக்கூடிய ஊரணிபுரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக்கோட்டை, அக்கரைவட்டம், தளிகைவிடுதி, உஞ்சியவிடுதி, காரியாவிடுதி, கலியரான்விடுதி, சிவவிடுதி, பின்னையூர், சில்லத்தூர், வெட்டிக்காடு, சங்கரநாதர்குடிக்காடு, வடக்குகோட்டை, தெற்குகோட்டை, திருநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதைப்போல நாளை பட்டுக்கோட்டை நகர்-2-ல் மகாராஜசமுத்திரம், பெருமாள் கோவில், லெட்சத்தோப்பு, பண்ணைவயல் ரோடு, வ.உ.சி. நகர், அறந்தாங்கி ரோடு மின் பாதைகளில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடக்கிறது. எனவே நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தொிவித்துள்ளனா்.

Exit mobile version