ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், வன்னிப்பட்டு, காவாரப்பட்டு, பேரையூர், கருவாக்குறிச்சி, சமயங்குடிக்காடு, குலமங்கலம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 1912 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ஒரத்தநாடு நகர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Power outage in Thanjavur tomorrow Orathanadu Circle Okkanadu Lower Yoor!
