தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் மின்சார பழுதுகள் ஏற்படாமல் இருக்க பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் நாளை (ஜூலை 1)மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் மின்சார பழுதுகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் அதை சரி செய்ய நோக்கில் அடிக்கடி மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் மாதந்தோறும் மின்சார பணிகளுக்காக குறிப்பிட்ட நாளில் மின்தடை ஏற்படுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
அதற்கு முன்னதாக மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிடும். அந்த வகையில் நாளை (ஜூலை 1) புதுப்பட்டி மற்றும் கந்தர்வக்கோட்டை துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றிகள் சோதனை பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புதுப்பட்டி, சிவன் தான் பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை கந்தர்வக்கோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். மேலும், பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.