இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில் லீட்சில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 78 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ஹென்ரி நிகோல்ஸ் ஆட்டமிழந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .
இங்கிலாந்து அணியின் ஜாக் லீச் வீசிய பந்தை எதிர்த்து ஸ்ட்ரைட் ட்ரைவ் ஷாட்டை ஹென்ரி நிக்கோல்ஸ் அடித்தார். அந்த பந்து எதிர்முனையில் இருந்த டேரில் மிட்செல் நோக்கி சென்றது .அப்போது தற்காப்பிற்காக அவர் அந்த பந்து தன் மீது படாமல் இருக்க விலகிய நிலையில் எதிர்பாராத விதமாக டேரில் மிட்சல் பேட்டில் பட்ட அந்த பந்து நேராக மிட் ஆஃபில் இருந்த பில்டர் அலெக்ஸ் லீஸ்க்கு சென்றது. அவர் அந்த பந்தை கேட்ச் பிடித்தார் .இதனால் ஹென்ரி நிக்கோலஸ் 19ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சொந்த அணி வீரரால் எதிர்பாராத விதமாக ஹென்ரி நிகோல்ஸ் ஆட்டமிழந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .