Site icon Thanjavur News

On the 24th, there will be power cuts in various parts of Thanjavur.

தஞ்சாவூர் நகரின் பல்வேறு பகுதிகளில் 24-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய தஞ்சை நகரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின் நிறுத்தம் தஞ்சை கோர்ட்டு ரோட்டில் உள்ள நகர் துணை மின் நிலையத்தில் 24-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள் நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வர நகர், உமாசிவன் நகர், பி.ஆர்.நகர், ெஜபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகர், டிசிடபிள்யூஎஸ் காலனி, களிமேடு-3 மற்றும் 4. மேல வீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடிரோடு, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளை கேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வெங்கடேச பெருமாள் கோவில், சேவியர் நகர், சோழன் நகர், கல்லணை கால்வாய் ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆடடுமந்தை தெரு, கீழவாசல், ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தாபளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஏபி சுவிட்ச் வரை மின் வினியோகம் இருக்காது.

மருத்துவக்கல்லூரி சாலை இதைப்போல தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள 110 கி.வோ. தொகுப்பு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 24-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம் நகர், கரூப்ஸ் நகர், ஏ.வி.பி. அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, ஆலக்குடி, மானோஜிப்பட்டி, ரெட்டிப்பாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version