Site icon Thanjavur News

Nagpur Test: Jadeja and Ashwin’s Australian team fell into the vortex! out for 177 runs.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர்.

கவாஜா ஒரு ரன்னில் சிராஜின் வேகத்தில் ஆட்டமிழந்தார். வார்னர் ஷமியின் பந்திவீச்சில் போல்டாகி வெளியேறியேறினார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய லபுஷேன் 49 ரன்கள் , ஸ்மித் 37 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். பின்னர் மாட் ரென்ஷா ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் அஸ்வின் பந்துவீச்சில் 36 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த பேட் கம்மின்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் நிலைத்து ஆடினார். அவர் 31 ரன்களில் வெளியேறினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது . இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட் ,அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார் வீழ்த்தினார்.

தொடர்ந்து முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடி வருகிறது.

Exit mobile version