Site icon Thanjavur News

Munnani player announces retirement from ODIs; Shocked fans!

ஒருநாள் போட்டியில் இறுதியாக இங்கிலாந்து அணியில் நாளை நடைபெற உள்ள போட்டியில் விளையாட போகிறேன்

“அதன்பின்னர் நான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க முடிவு செய்துள்ளேன். இந்த ஆலோசனைக்கு பிறகு தான் இந்த கஷ்டமான முடிவுகளை எடுக்க முடிந்தது. சக வீரர்களுடன் விளையாடிய ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமாக தான் இருந்தேன். என்னால் இந்த ஒருநாள் போட்டிகளில் 100 சதவீதம் விளையாட முடியவில்லை.”

“என்னால் அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட முடியவில்லை. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது, அது என்னால் முடியாது. அதுமட்டுமின்றி, நான் அணியில் இருக்கும்போது ஜோஸ் பட்லர் மற்றும் மற்ற வீரர்களுடைய இடத்தை நான் கைப்பற்றியது போல தோன்றுகிறது.”

“நான் ஓய்வு பெற்ற பிறகு, அடுத்த வீரருக்கு சரியான நேரம் அமைந்தால் நான் கடந்த 11 ஆண்டுகள் என்ன செய்தேனோ, அதனை அவரும் செய்வார்.இந்த முடிவுக்கு பிறகு என்னால் 100 சதவிதம் டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட முடியும். அதுமட்டுமின்றி, ஜோஸ் பட்லர், மத்தியூ மோட், மற்றும் சக வீரர்கள் என்னுடைய வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.”

பென் ஸ்டோக்ஸ் இதுவரை 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2919 ரன்களை அடித்துள்ளார். அதில் மூன்று சதம் மற்றும் 21 அரைசதம் அடித்துள்ளார்.

Exit mobile version